செய்திகள்
பயிர் பாதிப்பு சேத விவரங்களை வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி விவசாயிகளிடம் கேட்டறிந்த காட்சி.

மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: சேத விவரங்களை வேளாண் துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி கேட்டறிந்தார்

Published On 2021-01-23 17:25 GMT   |   Update On 2021-01-23 17:25 GMT
மன்னார்குடியில் மழையால் நெற்பயிர் சேதமடைந்த விவரங்களை வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி கேட்டறிந்தார்.
மன்னார்குடி:

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் தங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில்

டெல்டா பகுதியில் தொடர் மழையினால் சம்பா பயிருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழ்நாடு வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்து வருகிறார்கள்.

நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 3-ம் சேத்தி பகுதியில் பயிர்கள் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பயிர் சேத விவரங்கள் குறித்து தமிழக வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடியிடம் விளக்கமாக எடுத்து கூறினர்.
Tags:    

Similar News