மக்கள் தெளிவாக சிந்திக்க தொடங்கிவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர மக்கள் முடிவு செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மக்கள் தெளிவாக சிந்திக்க தொடங்கியுள்ளனர்- முதல்வர் பழனிசாமி பேச்சு
பதிவு: ஜனவரி 23, 2021 17:49
எடப்பாடி பழனிசாமி
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
திமுக ஆட்சியில் நாட்டு மக்களை கவனிக்காமல் வீட்டு மக்களையே கவனித்தனர். அதிமுகவை நேரடியாக எதிர்க்க முடியாமல் கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர துடிக்கிறார் முக ஸ்டாலின்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை வரும். பெண்களை காக்கும் அரணாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் தெளிவாக சிந்திக்க தொடங்கிவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர மக்கள் முடிவு செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.