செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்துக்கு கூடுதலாக 1.69 லட்சம் ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் வந்தன

Published On 2021-01-23 01:52 GMT   |   Update On 2021-01-23 01:52 GMT
தமிழகத்துக்கு கூடுதலாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 920 ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கடந்த 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்படி ‘கோவிஷீல்டு' மற்றும் ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

முன்னதாக தமிழகத்துக்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு' தடுப்பூசிகளும், 20 ஆயிரம் ‘கோவேக்சின்' தடுப்பூசிகளும் மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதையடுத்து சில நாட்கள் கழித்து 2-வது கட்டமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மேலும் கூடுதலாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 920 ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில நடமாடும் மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News