செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.6¾ லட்சம்

Published On 2021-01-22 02:57 GMT   |   Update On 2021-01-22 02:57 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில், வருமானமாக ரூ.6 லட்சத்து 86 ஆயிரத்து 161 ரொக்கம், 35 கிராம் 800 மில்லி கிராம் தங்கம், 101 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் கிடைத்தன.
கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் பணம், நகைகள் போன்றவற்றை காணிக்கையாக அளிப்பார்கள். இதற்காக கோவில் வளாகத்துக்குள் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு பிறகு நேற்று உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்கினார். நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், ஆய்வாளர் ராமலட்சுமி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவ ராமச்சந்திரன், பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள் ஈடுபட்டனர். இதில், வருமானமாக ரூ.6 லட்சத்து 86 ஆயிரத்து 161 ரொக்கம், 35 கிராம் 800 மில்லி கிராம் தங்கம், 101 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் கிடைத்தன.
Tags:    

Similar News