செய்திகள்
முதலாமாண்டு மாணவர்களுக்கு மருத்துவ சீருடைகளை முதல்வர் குந்தவி தேவி வழங்கிய போது எடுத்த படம்.

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா

Published On 2021-01-21 18:28 GMT   |   Update On 2021-01-21 18:28 GMT
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
விக்கிரவாண்டி:

முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியது.

இதையொட்டி கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் குந்தவி தேவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி வைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மருத்துவ சீருடைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் இன்று (11-வது பேட்ஜ்) முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில், சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரவேற்கிறேன்.

முதலாமாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களின் கனவு, உங்களின் அயராத உழைப்பின் காரணமாக தற்பொழுது மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளீர்கள். இந்த தருணத்தில் உங்கள் பெற்றோர்கள் மனம் மகிழ்ச்சியடையும்.

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் உங்களது வீட்டில் இருந்து படிப்பது போன்ற சூழ்நிலைதான் இங்கு நிலவும். கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் குடியிருப்புகளில் தங்கி உள்ளதால் மாணவர்கள் பயப்பட தேவையில்லை. மாணவர்கள் ராகிங் முற்றிலும் கிடையாது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அடிக்கடி கல்லூரியில் வந்து பார்த்து செல்லலாம்.

மாணவர்கள் எளிதாக படிக்க பேராசிரியர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள். படிப்பில் முன்னேறி தங்களின் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் துணை முதல்வர் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ. சாந்தி, துறை தலைவர்கள் சீனுவாசன், தாரணி, செந்தில் குமாரி, பிரேம்குமார், டாக்டர்கள் தரணிவேல், தீபா, நிர்வாக அலுவலர்கள் கவிஞர் சிங்காரம், ஆனந்த ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டானர்.
Tags:    

Similar News