தஞ்சாவூர் அருகே தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
பதிவு: ஜனவரி 21, 2021 20:13
கோப்புபடம்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் நெல்லித்தோப்பு கிராமம் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மகன் புண்ணியமூர்த்தி(வயது35). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் கோவிந்தராவ் பரிசீலனை செய்து புண்ணியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.