செய்திகள்
வைகோ

ம.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்- வைகோ அறிவிப்பு

Published On 2021-01-20 05:39 GMT   |   Update On 2021-01-20 05:39 GMT
ம.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேனி மாவட்ட பொறுப்பாளராக கம்பம் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். தேனி மாவட்ட செயலாளராக இருந்த சந்திரன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

கடலூர் தெற்கு மாவட்டக் கவுன்சிலர் காட்டுமன்னார்கோவில் கந்தசாமி அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News