செய்திகள்
டிடிவி தினகரன்

டி.டி.வி.தினகரன் உசிலம்பட்டியில் போட்டி?

Published On 2021-01-19 09:47 GMT   |   Update On 2021-01-19 09:47 GMT
தேனி மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

வருகிற தேர்தலில் அவர் தொகுதி மாற போவதாக கூறப்படுகிறது. தேனி மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த தொகுதியை பொறுத்தவரை சமூக ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் தினகரனுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதி என்று கருதுகின்றனர்.

ஏற்கனவே இந்த தொகுதிக்கு அருகில் உள்ள பெரிய குளம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று அந்த பகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர்.

ஏற்கனவே இந்த தொகுதியை தேர்வு செய்து தேர்தலுக்கான பணிகளை அவரது ஆதரவாளர்கள் தொடங்கி விட்டனர்.

தினகரன் தங்குவதற்கும், அலுவலகத்துக்கும் வீடு பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகளை தினகரனுக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர் ஒருவர் செய்து வருவதாக கட்சியினர் தெரிவித்தனர்.

உசிலம்பட்டி தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. வென்றது. மேலும் இந்த தொகுதி உருவானது முதல் பார்வர்டு பிளாக் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒருமுறைதான் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவேதான் இந்த தொகுதியை தேர்வு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News