செய்திகள்
ஜல்லிக்கட்டு (கோப்புப்படம்)

மாதாக்கோட்டை, திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

Published On 2021-01-19 09:37 GMT   |   Update On 2021-01-19 09:37 GMT
மாதாக்கோட்டை, திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல் தமிழகத்தில் திருச்சி, சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் திருக்கானூர்பட்டி, மாதாக்கோட்டை, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மாதாக்கோட்டையில் வருகிற 31-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அதேபோல் திருக்கானூர்பட்டியில் அடுத்தமாதம்(பிப்ரவரி) 21-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சேவியர், ஜல்லிக்கட்டு பேரவைக்குழு செயலாளர் சிமியோன்சேவியர் ராஜ், கிராம முக்கியஸ்தர்கள் ஆரோக்கியசாமி, அடைக்கலசாமி, ஜேசுராஸ் மற்றும் கிராமத்தினர் பலர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் கோவிந்தராவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், திருக்கானூர்பட்டி கிராமத்தில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி தொன்றுதொட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அடுத்தமாதம்(பிப்ரவரி) 21-ந்தேதி அரசு விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அரசு விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யும்படி அனுமதி அளித்தார். இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக் சேகர் சஞ்சயை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
Tags:    

Similar News