செய்திகள்
டாக்டர் சாந்தா

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

Published On 2021-01-19 02:00 GMT   |   Update On 2021-01-19 02:05 GMT
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான டாக்டர் சாந்தா இன்று அதிகாலை காலமானார்.
சென்னை: 

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா. இவருக்கு 93 வயது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். 

இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.   மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா.  அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்படுகிறது. 
Tags:    

Similar News