செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தூத்துக்குடியில் 2 நாட்களில் 98 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-01-18 04:15 GMT   |   Update On 2021-01-18 04:15 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 98 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் 10 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் இறந்து உள்ளனர். இதனால் தொழில் வளமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில் இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த தடுப்பூசியை முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதற்காக தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கு 9 ஆயிரத்து 300 டோஸ் மருந்தும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு 3 ஆயிரத்து 800 டோஸ் மருந்தும் ஆக மொத்தம் 13 ஆயிரத்து 100 டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வந்து உள்ளது. இதனை பயிற்சி பெற்ற சுகாதார பணியாளர்கள் மூலம் சுகாதார பணியாளர்களுக்கு நேற்று முன்தினம் முதல் செலுத்தப்பட்டு வருகின்றன. நேற்று 2-வது நாளாகவும் தடுப்பூசி போடப்பட்டன.

இதுவரை 4 மையங்களிலும் மொத்தம் 98 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மேலும் இன்று (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி மையங்களை அதிகரித்து கூடுதலாக தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News