செய்திகள்
எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தும் கமல்ஹாசன்

என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது- கமல்ஹாசன்

Published On 2021-01-17 09:06 GMT   |   Update On 2021-01-17 09:06 GMT
அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை என்றும் எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு என்றும் கமல்ஹாசன் பேசினார்.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காலத்தை வென்றவன் என்ற ஆவணப் படத்தை கமல்ஹாசன் வெளியிட்டார். இதையடுத்து அவர் பேசியதாவது;-

அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை. எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு. எம்.ஜி.ஆரின் மீட்சி தான் நான்; விதை நான் போட்டது என்பது சிவாஜி வசனம் மட்டுமல்ல; அது எம்.ஜி.ஆருக்கும் ஆனதுதான்

என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது.

இங்கு இருக்கும் அனைவருமே தமிழ் பேசும் திராவிடர்கள்தான்; பட்டா போட்டே பழகியதால் எம்.ஜி.ஆர் எங்களுக்கு மட்டும் சொந்தம் என சிலர் கூறுகிறார்கள்.

விஸ்வரூபம் படத்தின்போது அதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது. எம்ஜிஆர் இருந்திருந்தால் எனக்கு அப்போது அந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News