செய்திகள்
கைது

தகராறை விலக்கி விட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய 4 பேர் கைது

Published On 2021-01-16 14:05 GMT   |   Update On 2021-01-16 14:05 GMT
தகராறை விலக்கி விட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், கரூர் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளரான மகாமுனி என்பவரிடம் கருக்காம்பட்டி காலனியை சேர்ந்த நாட்ராயன் (வயது 23), அருண் என்ற கருப்பையா (21), தாமரைக்கனி (37), கார்த்தி (27) ஆகிய 4 பேர் சில்லரை பிரச்சினை தொடர்பாக வாய்த்தராறு செய்தனர். அப்போது சாதாரண உடையில் ரோந்து பணியில் இருந்த மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு மாரிமுத்து (45) தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் ஏட்டு மாரிமுத்துவை கீழே தள்ளி அவரை தாக்கினர். மேலும் மகாமுனியை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் காயம் அடைந்த ஏட்டு மாரிமுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து நாட்ராயன், தாமரைக்கனி உள்பட 4 பேரையும் கைது செய்தார்.
Tags:    

Similar News