செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

கனமழைக்கு வாய்ப்புள்ள 4 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published On 2021-01-13 10:06 GMT   |   Update On 2021-01-13 10:06 GMT
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையும் நிலவும் .

16-ந் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் 17-ந் தேதி வறண்ட வானிலையும் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டை 28, சேத்தியாத்தோப்பு 21, புவனகிரி 20, திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் 19, மணிமுத்தாறு 17, சிதம்பரம் 16, பெலந்தூரை 14, சீர்காழி 12, திருவிடைமருதூர்11 செ.மீ. மழை பெய்துள்ளது.

அம்பாசமுத்திரம், விருதாச்சலம் தலா 10, மயிலாடுதுறை, லப்பைக்குடிக்காடு, குடவாசல், கொள்ளிடம், கும்பகோணம் தலா 9, செந்துறை, நாகப்பட்டினம், பேராவூரணி, தேக்கடி, நன்னிலம்தலா 8, காட்டு மன்னார் கோயில், ஜெயங் கொண்டம் , வலங்கை மான், சேரன்மாதேவி தலா 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News