செய்திகள்
அரசு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published On 2021-01-08 12:25 GMT   |   Update On 2021-01-08 12:25 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்த பின் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாக வரும் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 15,270 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து 4,078 பேருந்துகளும், முக்கிய இடங்களில் இருந்து 5,993 பேருந்துகளும் இயக்கம்.

சென்னை மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைக்கு பேருந்து இயக்கம்.

கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு பேருந்துகள் இயக்கம்.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சைக்கு பேருந்துகள் இயக்கம்.

தாம்பரம் ரெயில்நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூருக்கு பேருந்துகள் இயக்கம்.

பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி செல்லலாம்.

கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய 13 மையங்கள் அமைக்கப்படும். கோயம்பேட்டில் 10, தாம்பரம் சானிடோரியம் 2, பூவிருந்தவல்லியில் ஒரு முன்பதிவு மையம் செயல்படும்.

கோயம்பேட்டில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல 24 மணிநேரம் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிய 20 இடங்களில் தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளின் இயக்கம் பற்றி அறிய 94450 14450, 94450 14436-ல் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151-ல் புகார் அளிக்கலாம்.

www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com, www.busindia.com மூலமாகவும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News