செய்திகள்
உச்ச நீதிமன்றம்

புதிய திட்டம் தேவையில்லை- 8 வழி சாலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

Published On 2021-01-08 09:23 GMT   |   Update On 2021-01-08 09:23 GMT
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை சேர்ந்த யுவராஜ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து, வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

புதிய திட்டம் தேவையில்லை என்றும், ஏற்கனவே உள்ள 3 நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார். 

8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News