செய்திகள்
கோப்பு படம்.

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா - 12 பேர் பலி

Published On 2021-01-07 13:31 GMT   |   Update On 2021-01-07 13:31 GMT
தமிழகத்தில் இன்று 805 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று 911 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 04 ஆயிரத்து 239 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News