செய்திகள்
கோப்புப்படம்

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை- ரூ.45 ஆயிரம் சிக்கியது

Published On 2021-01-07 09:01 GMT   |   Update On 2021-01-07 09:01 GMT
மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ. 45 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நிலையூரில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது. இங்கு அங்கன்வாடி மையங்களுக்கான தணிக்கை பணி நடைபெற்றது.

உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் தணிக்கை பணியை நடத்தினர்.

அப்போது 53 அங்கன்வாடி மையங்களை சேர்ந்த பணியாளர்களிடம் லஞ்சம் கொடுக்க வற்புறுத்தியதாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் போலீசார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ. 45 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது. மேலும் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி மையப் பணியாளர்களுக்கு ஆடிட்டிங் செய்வதற்காக ரூபாய் 250 ஒரு நபரிடம் வசூலித்த சம்பவம் இந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News