செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

ஆன்லைன் கடன் செயலிகள் கடனை வசூலிக்கும் முறை சரியல்ல -நீதிபதிகள் கண்டனம்

Published On 2021-01-06 07:03 GMT   |   Update On 2021-01-06 07:03 GMT
கடனை வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மதுரை:

ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, செயலிகள் மூலம் ஆன்லைனில் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவின் முக்கிய பிரச்சனையாக உள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

நீதிபதிகள் மேலும் கூறியதாவது:-

கடனை வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது. கடன் செயலிகள் மூலம் கடனை வசூலிப்பதற்காக அங்கீகரிக்க முடியாத முறையை பின்பற்றுகின்றனர். கடனை வசூலிக்கும் முறைகள் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதில்லை.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய நிதித்துறை செயலாளர், ரிசர்வ் வங்கி மற்றும் கூகுள் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News