செய்திகள்
கோப்புபடம்

வேளாண் சட்டங்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் - 27 பேர் கைது

Published On 2021-01-02 10:21 GMT   |   Update On 2021-01-02 10:21 GMT
விழுப்புரம் அருகே வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் காந்தி சிலை அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் அக்பர்அலி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.

இதேபோல் விக்கிரவாண்டியில் நகர தலைவர் முஸ்தபா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரும், செஞ்சியில் மாவட்ட தலைவர் சாதிக்பா‌ஷா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News