செய்திகள்
தமிழக அரசு

முதன்மைச் செயலாளர்களாக 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவிநிலை உயர்வு

Published On 2021-01-02 04:55 GMT   |   Update On 2021-01-02 04:55 GMT
தமிழக பணியில் உள்ள 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவிநிலை உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை:

தமிழக தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசுப் பணியில் 1997-ம் ஆண்டு சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு செயலாளர் பதவிநிலையில் இருந்து முதன்மைச்செயலாளர்களாக உயர்வு அளித்து உத்தரவிடப்படுகிறது.

அதன்படி, அரசுச் செயலாளர்கள் பதவியில் இருந்த டி.கார்த்திகேயன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச்செயலாளர் ஆகவும், எஸ்.சுவர்ணா பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை முதன்மைச் செயலாளராகவும், ஹர்சகாய் மீனா பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர் ஆகவும், பீலா ராஜே‌‌ஷ், வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளராகவும் பதவிநிலை உயர்வை பெறுகின்றனர்.

அதுபோல, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர்-2 ஆ‌ஷிஸ் வச்சானி, தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மற்றும் டான்ஜெட்கோ தலைவர் பங்கஜ்குமார் பன்சால், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோரும் முதன்மைச் செயலாளர் என்ற பதவிநிலை உயர்வை பெறுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News