கொரோனா பரிசோதனை கட்டணம் செலுத்த முடியாமல் சபரிமலையில் தவித்த பக்தர்களுக்கு அமைச்சர் உதயகுமார் உதவினார்.
மதுரையை சேர்ந்த பக்தர்கள் அய்யப்பனுக்கு விரதம் இருந்து சபரிமலை சென்றனர். அங்கு எரிமேலியில் கொரோனா பரிசோதனைக்காக பக்தர் ஒருவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் அங்கு பரிசோதனை கட்டணத்தை செலுத்த முடியாமல் 10 பக்தர்கள் தவித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக அங்கு வந்தார். அவர் மதுரை பக்தர்கள் பணம் இல்லாமல் தவிப்பதை அய்யப்ப சேவா சங்கத்தினர் மூலம் தெரிந்து கொண்டார்.
இதைதொடந்து பணம் இல்லாமல் தவித்த 10 பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணமான 25 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்தி விட்டு அங்கிருந்து சபரிமலை புறப்பட்டு சென்றார். அவருக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.