செய்திகள்
ப சிதம்பரம்

ரஜினிகாந்துடன் இணக்கமாக பணியாற்ற விருப்பம்- ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு

Published On 2020-12-31 02:58 GMT   |   Update On 2020-12-31 02:58 GMT
ரஜினிகாந்துடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய இனிய நண்பர் ரஜினிகாந்த் அறிவித்த முடிவினை அவருடைய நலம்விரும்பி என்ற முறையில் நான் வரவேற்கிறேன். ரஜினிகாந்த் ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர், விளங்குவார் என்பதில் எனக்கு அய்யமில்லை. 1996-ம் ஆண்டைப் பல முறை நினைத்துப் பார்த்து நான் மகிழ்ச்சியடைபவன். 2021-ம் ஆண்டையும், அதற்குப் பிறகு 2024-ம் ஆண்டையும் நான் எதிர்நோக்குகிறேன். அவற்றில் ரஜினிகாந்துடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல். ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்க.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News