செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட முயற்சி- ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2020-12-30 15:07 GMT   |   Update On 2020-12-30 15:07 GMT
அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிகடந்த 19-ந்தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரசாரம் தொடங்கினார்.

இதையடுத்து திருச்சியில் இன்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

*அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

* உண்மை தான் வெல்லும், ஸ்டாலினின் பொய் அறிக்கை எடுபடாது.

அதிமுகவில் சாமானியர் கூட முதல்வராக முடியும்.

*புயலை விட வேகமாக செயல்பட்டு, சாதித்து காட்டியது அதிமுக அரசு. 

* தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு பணி மேற்கொண்டதால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.
Tags:    

Similar News