செய்திகள்
அமைச்சர் காமராஜ்

நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவின்றி பொங்கல் பாிசு வழங்கப்படும்- அமைச்சர் காமராஜ் தகவல்

Published On 2020-12-27 09:36 GMT   |   Update On 2020-12-27 09:36 GMT
நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவின்றி பொங்கல் பாிசு வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் அருகே உள்ள பனங்குடி பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன் உதவி தொகைகளைஅமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் நிருபா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு, கைரேகை பதிவின்றி (பயோமெட்ரிக் முறை) வழங்கப்படும். கார்டுகளை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் பழைய நடைமுறையில் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுவழங்கப்பட உள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 532 சர்க்கரை ரேஷன் கார்டுகள், அரிசி காா்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

பயோமெட்ரிக் முறை திட்டம் நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ளது. அவ்வப்போது பயோமெட்ரிக் முறையில் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது. அவை அனைத்தும் சரி செய்யப்படும்.

கடந்த காலங்களில் தி.மு.க.வினர் மீது பல்வேறு ஊழல் வழக்கு உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வினர் மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் தெரிவித்து பட்டியல் உள்ளதாக தி.மு.க. தலைவா் முக ஸ்டாலின் கூறுவது சிாிப்பை ஏற்படுத்துகிறது. எங்கள் மீது கூறப்படும் ஊழல் புகார்களை எங்கு வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு இவா் கூறினார்.
Tags:    

Similar News