செய்திகள்
பாபநாசம் அணை

பாபநாசம் ஆற்றில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி

Published On 2020-12-23 10:18 GMT   |   Update On 2020-12-23 10:18 GMT
பாபநாசம் ஆற்றில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லவும் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.
விக்கிரமசிங்கபுரம்:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பாபநாசம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீராக 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எனவே ஆற்றில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 1,269.66 கன அடியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், பாபநாசம் ஆற்றில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பாபநாசம் படித்துறையில் ஏராளமானவர்கள் குளித்தனர். அதேபோல் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லவும் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.
Tags:    

Similar News