செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

48-வது பிறந்தநாள்: ஜெகன்மோகன் ரெட்டிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2020-12-21 09:35 GMT   |   Update On 2020-12-21 09:35 GMT
ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று 48-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று 48-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டிக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-


பிறந்தநாள் காணும் மகிழ்ச்சிகரமான இந்த நாளில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News