செய்திகள்
கிரிஜா வைத்தியநாதன்

தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினராக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

Published On 2020-12-15 20:15 GMT   |   Update On 2020-12-15 20:15 GMT
தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர சென்னையில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயமும், மேலும் 3 இடங்களில் பசுமை தீர்ப்பாய கிளையும் செயல்பட்டு வருகின்றன. தேசிய பசுமை தீர்ப்பாய கிளைகளில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நீதித்துறை உறுப்பினராகவும், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் நிபுணர் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யகோபால் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஐ.எப்.எஸ். அதிகாரியான அருண் குமார் வர்மா என்பவரும் பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கான துறை பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை இவர்களை நியமனம் செய்துள்ளது. இவர்களது பணி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.
Tags:    

Similar News