தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கபிஸ்தலம் அருகே உள்ள திருவைகாவூர் ஊராட்சி மெயின் ரோட்டில் வசிப்பவர் ஆனந்தகுமார். விவசாயி. இவரது மகன் குமரன்(வயது 10). இவன் கொட்டையூரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை குமரன் தனது சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் குமரன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மன்னிகரையூரை சேர்ந்த டிரைவர் மணிகண்டன்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.