செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசனை கேட்டேன்- தமிழிசை பேச்சு

Published On 2020-12-11 19:42 GMT   |   Update On 2020-12-11 19:42 GMT
தெலுங்கானாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசனை கேட்டேன் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
சென்னை:

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளையின் புதிய தலைவர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தற்போது இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் சி.என்.ராஜா தலைவருக்கான பதக்கத்தை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் பி.ராமகிருஷ்ணனுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள் என கூறப்பட்டு வந்தது.தனது முழு முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி, இவ்வளவு பெரிய மாநிலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் என்றால், அந்த பெருமை முதல்-அமைச்சர் வழிகாட்டுதலோடு செயல்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையே சாரும். தெலுங்கானாவில் சில பிரச்சினைகள் வரும்போது, தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டு, தமிழகத்தில் என்னென்ன நடைமுறைகளை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டு, அதை சொன்னதனால், தெலுங்கானா பலன் பெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ஜெயலால், தமிழக செயலாளர் டாக்டர் எ.கே.ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News