செய்திகள்
கைது

மதுரையில் 31 கிலோ கஞ்சா பறிமுதல்: ரவுடி உள்பட 2 பேர் கைது

Published On 2020-12-11 13:09 GMT   |   Update On 2020-12-11 13:09 GMT
மதுரையில் போலீசார் நடத்திய சோதனையில் 31 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை:

மதுரை தத்தனேரி வைகை வடகரை தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் 2 பேர் கஞ்சா விற்பதாக செல்லூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு ரகசிய தகவல் வந்தது.

இதன் அடிப்படையில் அவர் சக போலீசாருடன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அங்கு 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் எதுவும் சிக்கவில்லை.

எனவே போலீசார் கழிவுநீர் வாய்க்கால் பாலத்தின் அடியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

அப்போது அங்கு இரண்டு சாக்குப்பைகள் கைப்பற்றப்பட்டன. அந்த சாக்குப்பையில் 31 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் சிம்மக்கல் சுப்புராயர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த குமார் என்கிற ஜட்டி குமார் வயது 45 மற்றும் வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் என்கிற கேடி கிருஷ்ணன் வயது 23 என்பது தெரியவந்தது

இதில் ஜட்டி குமார் மீது ஏற்கனவே செல்லூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனை தொடர்ந்து செல்லூர் போலீசார் 31 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஜட்டி குமார், கேடி கிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News