செய்திகள்
குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் அரசு மருத்துவமனை அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

Published On 2020-12-09 10:06 GMT   |   Update On 2020-12-09 10:06 GMT
கரூர் அரசு மருத்துவமனை அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:

கரூர் நகராட்சி வடக்கு காந்திகிராமம் பகுதிக்குட்பட்ட ராஜாநகர் தெரு மற்றும் பாரதியார் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகே அமைந்துள்ள ஒரு சாலை ஓரத்தில் மலைப்போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி வழியாக மருத்துவகல்லூரிக்கு செல்லும் ஊழியர்கள், நோயாளிகள் பலர் மூக்கை பிடித்துக் கொண்டு சென்று வருகின்றனர்.

மேலும் அப்பகுதி குடியிருப்பில் உள்ள கால்நடைகள் குப்பைகளை கிளறி விட்டு செல்வதால் அங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் அந்த குப்பைகளில் இருந்து கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News