சேந்தமங்கலம் அருகே நகராட்சி ஊழியர் பலியான சம்பவம் குறித்து ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் நகராட்சி ஊழியர் பலி - ஆட்டோ டிரைவர் கைது
பதிவு: டிசம்பர் 05, 2020 20:10
கோப்புபடம்
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள சிதம்பரபட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 26). நாமக்கல் நகராட்சி அலுவலக ஊழியரான இவர் முத்துகாபட்டி அருகே கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வழியில் ஆட்டோ கவிழ்ந்து படுகாயமடைந்து இறந்தார்.
விபத்து நடந்ததும் ஆட்டோ டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் அருள் என்ற மணிகண்டனை (24) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.