செய்திகள்
மதுரை ஐகோர்ட்

கோவில்களின் கும்பாபிஷேக விழாவில் தமிழும் இடம் பெற வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

Published On 2020-12-04 01:13 GMT   |   Update On 2020-12-04 01:13 GMT
கோவில்களின் கும்பாபிஷேக விழாவில் தமிழும் இடம் பெற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை:

கரூரை சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ‘900 ஆண்டுகள் பழமையான கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழா 4-ந்தேதி (இன்று) நடக்கிறது. கும்பாபிஷேகம் நடக்கும்போது தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம் ஓதப்பட வேண்டும் என கோவில் உதவி கமிஷனரிடம் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம், போன்றவைகள் வாசிக்கப்பட்டு நடத்த உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், “அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் கும்பாபிஷேக விழா நடந்தாலும், தமிழிலும் தேவாரம், திருவாசகம் போன்றவை பாடப்பட வேண்டும்” என்று கூறி விரிவான உத்தரவுக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News