செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லை- முதலமைச்சர்

Published On 2020-12-03 09:15 GMT   |   Update On 2020-12-03 09:15 GMT
ஆன்லைனிலேயே டெண்டர், ஆன்லைனிலேயே பணம் செலுத்தும் நடைமுறையில் எப்படி ஊழல் நடக்கும்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
சேலம்:

சேலத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணி, கொரோனா தடுப்பு பணி பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி கூறியதாவது:-

சேலத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மாவட்டத்தில் 39,317 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெறுகின்றன.

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 26 பேருக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது.

அரசின் திட்டங்களை பற்றி அறியாமல் தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். வீட்டிலேயே இருந்து கொண்டு அதிமுக ஆட்சியில் ஊழல், ஊழல் என குற்றஞ்சாட்டுகிறார். அரசின் மீது வேண்டுமென்றே அவதூறாக பழி சுமத்துகிறார்.

தமிழகத்தின் பட்ஜெட் அளவுக்கு 2ஜியில் திமுக ரூ.1.76 லட்சம் கோடிக்கு ஊழல் செய்தது. என் உறவினருக்கு டெண்டர் கொடுத்து விட்டதாக பேசிக்கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆன்லைன் டெண்டரில் யார் வேண்டுமானாலும் ஒப்பந்தப் புள்ளி கோரலாம். ஆன்லைனிலேயே டெண்டர், ஆன்லைனிலேயே பணம் செலுத்தும் நடைமுறையில் எப்படி ஊழல் நடக்கும்?. அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதில் ஊழல் நடைபெறவில்லை.

வீராணம் திட்டம் வீணாப் போன திட்டமானது. மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News