செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினியால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-12-03 07:57 GMT   |   Update On 2020-12-03 07:57 GMT
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை:

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஊழல் என்று ரஜினி கூறுவது திமுகவைத்தான்; கட்சி ஆரம்பிப்பது அவரவர் உரிமை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News