செய்திகள்
கொள்ளை முயற்சி

கம்பம் அருகே 2 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சி

Published On 2020-12-02 10:05 GMT   |   Update On 2020-12-02 10:05 GMT
கம்பம் அருகே 2 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:

கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி சார்பிலும், தனியார் வங்கி சார்பிலும் 2 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.

இந்தநிலையில் நேற்று காலை 2 ஏ.டி.எம். மையங்களில் ஒரு மையத்தில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. மற்றொன்றில் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையங்களை பார்வையிட்டனர். பின்னர் ஏ.டி.எம். மையங்களில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர்கள் 2 பேர், ஒரு ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். அப்போது அதில் பணத்தை எடுக்க முடியாததால் திரும்பி சென்றனர். பின்னர் அருகில் இருந்த மற்றொரு ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி கதவை உடைத்தது தெரியவந்தது.

இதையடுத்து வங்கி மேலாளர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News