நாமக்கல் அருகே டைல்ஸ் ஷோரூம் கணக்காளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை அடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து தியாகராஜன் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடினர். இருப்பினும் அவர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.