செய்திகள்
கைது

போடி அருகே பூ வியாபாரியை குத்திக்கொன்ற வாலிபர் கைது

Published On 2020-12-02 05:18 GMT   |   Update On 2020-12-02 05:18 GMT
போடி அருகே முன் விரோதத்தில் பூ வியாபாரியை குத்திக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மேலசொக்கநாதபுரம்:

போடி நகராட்சி பேட்டை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 65). பூ வியாபாரி. போடி டவுன் போலீஸ் நிலையம் எதிரே பூக்கடை வைத்துள்ளார். இவரது மகன் பாலமுருகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

கடந்த ஜூலை மாதம் லிங்கேஸ்வரி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் லிங்கேஸ்வரியின் தம்பி சுந்தரேஸ்வரன் (23) தனது அக்காவின் சாவுக்கு முருகன் குடும்பத்தினர்தான் காரணம் என அவர்களுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இது மட்டுமின்றி லிங்கேஸ்வரியின் திருமணத்தின் போது தாங்கள் போட்ட 30 பவுன் நகையை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த நகையை தராமல் முருகன் குடும்பத்தினர் தாமதப்படுத்தி வந்துள்ளனர்.

நேற்று இரவு முருகனின் பூக்கடைக்கு வந்து இது குறித்து பேசிக்கொண்டு இருந்த போது சுந்தரேஸ்வரனுக்கும் முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அத்திரமடைந்த சுந்தரேஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக குத்தினார். படுகாயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியிலும் பின்னர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்ட முருகன் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரேஸ்வரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News