செய்திகள்
சிறப்பு ரெயில்

கோவை-நாகர்கோவில் சிறப்பு ரெயில் 8ந் தேதி முதல் இயக்கம்

Published On 2020-12-02 05:15 GMT   |   Update On 2020-12-02 05:15 GMT
கோவை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் வருகிற 8ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
கோவை:

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மற்றும் வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு பகுதிக்கு ரெயில்கள் இயக்கப்படாததால் தீபாவளி பண்டிகை மற்றும் மருத்துவ தேவைக்காக பொதுமக்கள் ரெயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கோவையில் இருந்து தென்னக பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்தநிலையில் கோவை- நாகர்கோவில் இடையே திருநெல்வேலி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதற்கான அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

கோவை-நாகர்கோவில் இடையே (02668) சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் தினமும் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் இருந்து தினமும் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இதேபோல் நாகர்கோவில்-கோவை (02267) இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு கோவையை வந்தடைகிறது.

கோவையில் இருந்து புறப்பட்டு இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலை சென்றடைகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீண்டநாளாக எதிர்பார்த்த கோவை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News