செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

நாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2020-12-01 08:32 GMT   |   Update On 2020-12-01 08:32 GMT
வங்கக்கடலில் நாளை காலை புரெவி புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புரெவி புயலாக வலுப்பெற உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடக்கும்.  டிச.3ம் தேதி காலை தென்தமிழக கடல் பகுதியை நெருங்கும்.

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

நாளை மாலை அல்லது இரவில் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். இதனால் நாளை தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News