தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்து 997 பேர் - மாவட்ட வாரியாக விவரம்
பதிவு: நவம்பர் 30, 2020 23:01
கோப்பு படம்
சென்னை:
தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 24
செங்கல்பட்டு - 571
சென்னை - 3,749
கோவை - 939
கடலூர் - 93
தர்மபுரி - 122
திண்டுக்கல் - 151
ஈரோடு - 391
கள்ளக்குறிச்சி - 58
காஞ்சிபுரம் - 262
கன்னியாகுமரி - 138
கரூர் - 183
கிருஷ்ணகிரி - 166
மதுரை - 243
நாகை - 228
நாமக்கல் - 219
நீலகிரி - 174
பெரம்பலூர் - 2
புதுக்கோட்டை - 94
ராமநாதபுரம் - 41
ராணிப்பேட்டை - 67
சேலம் - 521
சிவகங்கை - 85
தென்காசி - 99
தஞ்சாவூர் - 172
தேனி - 20
திருப்பத்தூர் - 47
திருவள்ளூர் - 503
திருவண்ணாமலை - 107
திருவாரூர் - 135
தூத்துக்குடி - 122
திருநெல்வேலி - 126
திருப்பூர் - 568
திருச்சி - 160
வேலூர் - 179
விழுப்புரம் - 131
விருதுநகர் - 88
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 3
உள்நாடு - 16
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 10,997
Related Tags :