செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்

Published On 2020-11-30 09:54 GMT   |   Update On 2020-11-30 09:54 GMT
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* நீர்நிலைகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குகிறது.

* 2004ல் மடிப்பாக்கம், வேளச்சேரி, ராம்நகரில் 20% ஆக இருந்த வீடுகள் தற்போது 80% ஆக மாறி உள்ளன.

* 2015ல் மட்டுமல்ல அதுக்கு முன்பிருந்தே சென்னையில் தண்ணீர் தேங்கிக்கொண்டுதான் இருந்துள்ளது.

* மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தீர்க்க நிதி ஆதாரமும் தேவை.

* தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிதி ஆதாரம் இல்லை.

* மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

* செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

* அரசின் தொடர் நடவடிக்கையால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் தற்போது குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News