செய்திகள்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

2 ஆயிரம் மினி கிளினிக் : எடப்பாடி பழனிசாமிக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

Published On 2020-11-29 21:54 GMT   |   Update On 2020-11-29 21:54 GMT
தமிழகத்தில் நடமாடும் ‘மினி கிளினிக்’ தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் நடமாடும் ‘மினி கிளினிக்’ தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. தமிழகத்தில் கொரோனா பரவல், புயல், மழை, காற்று மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவற்றால் சுகாதார சீர்கேடும், மக்களின் உடல்நலனில் பாதிப்பும் ஏற்படுமோ? என்ற அச்சம் மக்களுக்கு ஏற்படக்கூடிய இந்த நேரத்தில், தமிழக அரசு நடமாடும் மினி கிளினிக்குகள் தொடங்க இருப்பது ஏழை-எளிய, நடுத்தர மக்களின் சுகாதாரத்தையும், உடல்நலனையும் கவனத்தில்கொண்டு மிகுந்த அக்கறையோடு எடுத்த சிறப்பான முடிவு ஆகும்.

இதன் மூலம் நோய் தொற்றின் பரவல் மேலும் குறையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News