செய்திகள்
எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள்

டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம், தமிழகத்திற்கு ரெட் அலர்ட், தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Published On 2020-11-29 08:10 GMT   |   Update On 2020-11-29 08:10 GMT
அனுமதி அளித்த மைதானத்திற்கு செல்ல மறுத்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம், தமிழகத்திற்கு ரெட் அலர்ட், ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

# புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் எப்படி பயன்படுத்தி நன்மை அடையலாம் என்பதை ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி விளக்கினார். புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

# விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட டெல்லி புராரி மைதானத்திற்கு பெரும்பாலான விவசாயிகள் செல்லாமல் மாநில எல்லைகளிலேயே போராட்டம் நடத்துகின்றனர். இதனால் எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

# ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று இரவு பாகிஸ்தான் நாட்டு ட்ரோன் பறந்தது. இதனை கவனித்த  எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து அந்த ட்ரோன் பாகிஸ்தான் நோக்கி திரும்பிச் சென்றது.

# ஐதராபாத் பெயர் மாற்றம் தொடர்பான விவகாரத்தை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் கையில் எடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தில் உள்ள நகரங்களின் பெயரை மாற்றியதுபோல், ஐதராபாத் பெயரை ஏன் மாற்ற முடியாது? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

# திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து குறித்த விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 28-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலுக்கு நிகர சொத்து 7 ஆயிரத்து 754 ஏக்கர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

# இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 88.02 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4.53 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

# புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

# தி.மு.க. விண்வெளியில் சென்று பிரச்சாரம் செய்தாலும் மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

# மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் மாநிலத்திற்கு மாநிலம் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.

# அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

# ஆப்கானிஸ்தானில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை  தாக்குதலில் 26 வீரர்கள் கொல்லப்பட்டனர். 17 வீரர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 

# விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடையும் என மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.

# விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்தி வெளியானதால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அறிக்கை வெளியிட்ட படக்குழு, தியேட்டரில் படத்தை வெளியிட விரும்புவதாக கூறி உள்ளது.
Tags:    

Similar News