செய்திகள்
பாசனத்துக்காக பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு

பாசனத்துக்காக பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு

Published On 2020-11-28 09:02 GMT   |   Update On 2020-11-28 09:02 GMT
பாசனத்துக்காக பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பழனி சப்-கலெக்டர் அசோகன் மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.
பழனி:

பழனி அருகே பாலாறு-பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அதன்படி 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் 50.98 அடி வரையில் நீர் உள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 55 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. இந்நிலையில் பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று மானூர், கீரனூர், அ.கலையம்புத்தூர் பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி நேற்று பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பழனி சப்-கலெக்டர் அசோகன் மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது சீறிப்பாய்ந்த தண்ணீரில் அவர் மலர்தூவி வரவேற்றார். இந்தநிகழ்ச்சியில் பாலாறு-பொருந்தலாறு அணை இளநிலை பொறியாளர் விஜயமூர்த்தி மற்றும் வருவாய், பொதுப்பணித்துறை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து வினாடிக்கு 116 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன்மூலம் மானூர், கீரனூர், கோரிக்கடவு, தாமரைக்குளம் பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 168 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றனர்.
Tags:    

Similar News