செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-11-28 06:17 GMT   |   Update On 2020-11-28 06:17 GMT
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்களுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது.

* அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் விருது பெற பாடுபட்டவர்களுக்கு நன்றி. அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் பெற்றது ஒட்டுமொத்த முயற்சியாகும்.

* நிவர் புயலால்  வேலூர், ராணிப்பேட்டையில் அதிக மழை பெய்துள்ளது.

* நிவர் புயல் காரணமாக  ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது

* நிவர் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில்  சிறப்பான நடவடிக்கை எடுத்த  கலெக்டர்களுக்கு பாராட்டுகள்.

* தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை.

* தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

* நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர உத்தரவிடப்பட்டுள்ளது.

* ‘இந்தியா டுடே’ விருதுக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News