எந்த விதிகளின் அடிப்படையில் கடன்தொகை வசூலை தனியார் நிறுவனத்திடம் வங்கிகள் தருகின்றன? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இப்படி செய்வதற்கு பதில் கடன் தராமலே இருக்கலாம்... வங்கிகளை கடிந்துகொண்ட நீதிபதிகள்
பதிவு: நவம்பர் 27, 2020 13:48
உயர் நீதிமன்ற மதுரை கிளை
மதுரை:
திருச்சி சின்னக்கடை விதியில் உள்ள ஒரு வங்கி, கடன் தொகை வசூல் செய்யும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை திரும்ப பெறக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடனை வசூலிப்பதில் வங்கிகள் நடந்துகொள்ளும் விதம் குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது:-
1000 கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால் சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகிறார்கள். பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது.
தனியார் நிறுவனம் மற்றும் குண்டர்கள் மூலம் கடனை வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் தராமல் இருக்கலாம். எந்த விதிகளின் அடிப்படையில் கடன்தொகை வசூலை தனியார் நிறுவனத்திடம் வங்கிகள் தருகின்றன?
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின்போது வழக்கில் சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் ஆஜராகவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Related Tags :