பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அங்குள்ள குடிசைகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூரில் பலத்த மழை- குடிசைகளை கலெக்டர் ஆய்வு
பதிவு: நவம்பர் 26, 2020 21:02
குடிசைகளை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
பெரம்பலூர்:
‘நிவர்‘ புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு அண்ணா நகர் பகுதிகளில் சுவர்கள் பலவீனமாக உள்ள குடிசைகளில் வசித்து வரும் பொதுமக்களை, அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா அங்குள்ள குடிசைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல் எம்.ஜி.ஆர். நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், எளம்பலூர், இந்திரா நகரில் குடிசை வீடுகளில் வசிக்கும் 26 பேரை கலெக்டர் நேரில் சந்தித்து தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? எனவும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதனை கேட்டறிந்தார். அப்போது நகராட்சி ஆணையர் குமரி மன்னன், பெரம்பலூர் தாசில்தார் அருளானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.