செய்திகள்
கலெக்டர் சிவன்அருள் கேடயம் வழங்கிய காட்சி.

பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த அரசு ஆஸ்பத்திரி

Published On 2020-11-26 15:02 GMT   |   Update On 2020-11-26 15:02 GMT
தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு முதல் இடத்தை பிடித்தது. இதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்:

தமிழகத்தில் 73 அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு உள்ளது. இந்த பிரிவில் அதிக குழந்தை உயிர்களை காப்பாற்றியது, ஒரு கிலோவுக்கும் குறைவான எடையில் பிறந்த குழந்தைகளை காப்பாற்றியது, தனியார் மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பாற்றியது உள்பட மாதம் 500 குழந்தைகளுக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து, தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு முதல் இடத்தை பிடித்தது. இதற்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதல் இடத்தை பிடித்த திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் திலீபன், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு டாக்டர் செந்தில்குமரன் ஆகியோரை கலெக்டர் சிவன்அருள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது டாக்டர் கே.டி.சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News